இளம் வயது முதல் எழுத்திலும் பேச்சிலும் எனக்கிருந்த ஆர்வம் மேன்மேலும் பெருகிக் கொண்டே வந்தது. புத்தகங்கள் வாசிப்பதிலும் எப்பொழுதும் ஆர்வம் குறையாமல் இருந்துகொண்டே வந்தது.
நான் முழுமையாக விரும்பிப் படித்த ஆரம்பகால நூல்கள் (ஏறக்குறைய 4ம் 5ம் வகுப்பு படிக்கும் காலத்தில் நல்லதங்காள் கதைப்பாடல்கள், விக்கிரமாதித்தியன் கதைகள், தேசிங்குராஜா கதைகள் பின்னாளில் பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன் கவிதைகளில் அதிக விருப்பம் ஏற்பட்டது.

முக்கியமாக பாரதியார் கவிதைகளை விரும்பி வாசிப்பதுண்டு.
பேச்சுப்போட்டியில் 8ம் வகுப்பு படிக்கும் போது முதன் முதலாக இரண்டாம் பரிசு பெற்றேன். மகாத்மா காந்தியடிகளின் வரலாறாக "பாபு" என்கின்ற நூலைப் பரிசாகக் கொடுத்தார்கள். அந்த வாசிப்பு என்னை மிக நல்ல பாதைக்கு அழைத்துச் சென்றது.

நான் எழுதிய கவிதைகளில் அச்சேறிய முதல் கவிதை - 11ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது 1 - 6 - 1985 "தமிழரசு" - தமிழ்நாடு அரசின் இதழில் மாணவர் மாணவர் பக்கத்தில் "ஒன்று பட்டு வாழ்வோம்" என்ற தலைப்பில் வெளிவந்தது.

12ம் வகுப்பு படிக்கும் பொழுது எனது கவிதைகளை B - கோயம்புத்தூர் இளையபாரதத்தில் நானே படித்தேன். பிறகு தொடர்ந்து ரேடியோவில் "தேன்மழை" என்கிற தலைப்பில் திரைப்பாடல்களைத் தொகுத்து வழங்கினேன்.

கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் போது "அவனே மனிதன்" என்கிற தலைப்பில் இளைய பாரதம் நிகழ்ச்சியில் சிறுகதையைப் படைத்தேன். அதுவே நான் எழுதிய முதல் சிறுகதை ஆகும்.

ஈரோடு சிக்கய நாய்க்கர் கல்லூரியில் படித்த மூன்றான்டுகளும், கல்லூரி மலரில் ( B ) தொடர்ந்து எனது படைப்புகள் இடம் பெற்றன.

மனம் என்கிற தலைப்பில் நான் எழுதிய முதல் கட்டுரை 1988 கல்லூரி மலரில் வெளிவந்துள்ளது.

எனது முதல் நூல் - கவிதை நூலாக - 1988ல் "ஏங்கும் இதயம்" எனும் தலைப்பில் டாக்டர் ஒளவைநடராஜன் அவர்களின் கருத்துரையுடன் - எனது சொந்த வெளியீடாக வெளிவந்தது.

உலகத்தில் செல்வம் உடையவர்கள் சிலரும், செல்வமில்லாதவர்கள் பலருமாக இருப்பதற்குக் காரணம் "தவம்" செய்கின்றவர் சிலரும் தவம் செய்யாதவர் பலருமே இருத்தலே ஆகும் என்கிறார் வள்ளுவர்.

மேலும்,
"மாந்தர் தம் உள்ளத்தினை உயர்வு"
"மனத்துக்கன் மாசிலனாதல்" (குறள் - 270)
ஆகியவைகளும் வெற்றியின் படிக்கட்டுகளே ஆகும்.

"மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ்வார்" (குறள் - 3)

இந்த மண்ணுலகில் நிறைந்த செல்வாக்குடன் நீடூடி வாழ வேண்டும் என்றால், உள்நோக்கி, நெஞ்சமாகிய தாமரை மலரில் வீற்றிருக்கும் கடவுளின் பெருமை பொருந்திய திருவடிகளை இடைவிடாமல் நினைந்து கொண்டிருக்க வேண்டும்.

ஆனால் நம்மில் பலருக்கு ஒரு நிமிடம் கூட தொடர்ந்து அலைபாயும் மனத்தை சீராக்க முடிவதில்லை.

கடலில் அலைகள் போல மனதில் எண்ண அலைகள் ஓடிக்கொண்டேயிருக்கின்றன.

இந்த எண்ண ஓட்டத்தை சரிசெய்து, எண்ண மேம்பாட்டில் வெற்றிகாணும் வழிமுறையை எண்கள் மூலமாக நடத்தி விட முடியும்.

ஆம்! ஹீப்ரு நெடுங்கணக்கு கூம்பு கோபுரம் (Hebrew Pyramid) மூலாதாரம் முதல் சகரஸ்ரா வரை யோகச் சக்கரங்களில் ஆற்றலை ஏற்படுத்தி "ஆரா" வில் ஈர்ப்பு மிகு காந்த சக்தியை வழங்குகிறது.

வெறுமனே நியூமராலஜி என்பது முழுமையான முறை அல்ல. நாம் வெளியிட்டிருக்கின்ற ஆய்வு நூல்களே நியூமராலஜியின் முழுமை ஆக்கமாகத் திகழ்கின்றன.பல்லாண்டுகளாக யோசித்து , ஆய்ந்து, தெரிந்த உண்மை விளக்கத்தை உலக மாந்தர்கள் அனைவரும் கற்று ஆனந்தமாக வாழவேண்டும் என்ற உயரிய நோக்கத்தின் விளைவே, இந்த "வெப்சைட் சந்திப்பும்" என்றால் அது மிகையாகாது.

கடந்த 12 ஆண்டுகளில் அதாவது "ஹீப்ரு பிரமிடு நியூமராலஜி" என்கிற முதல் நூல் வெளியான 2002 முதல் (உலகிலேயே முதன்முதலாக வெளிவந்த ஹீப்ருநெடுங்கணக்கு பிரமிடு நியூமராலஜி இது) ஆயிரக்கணக்கான மனிதர்களின் வாழ்க்கையில் ஆற்ற்ல் மிகு முன்னேற்றத்தை உருவாக்கியுள்ளது. புத்தகத்தைப் படித்தவர்கள் பிரமிடு எண் இரகசியம் கண்டு ஆச்சரியப்பட்டு வாழ்த்தினார்கள்; பாராட்டினார்கள்; வண்ங்கினார்கள்! நேரில் என்னிடம் வந்து பெயர் மாற்றம் செய்து கொண்டு, நான்கொடுத்த பயிற்சியின் மூலமாக நன்மைகளைப் பெற்று வருகிறார்கள். நேர்மறை ஆற்றல் (Positive Energy) கொண்ட எண்கள், தேதிகள் எவை? எவை? எதிர்மறை ஆற்றல் (Negative Energy) கொண்ட எண்கள், தேதிகள் எவை? எவை? என விளங்கிக்கொண்டு Every Action Reaction என்கிற அடிப்படையில், "ஏக்டிவேட்" செய்த ஆற்றலின் தன்மைகளை அடைந்தே தீர முடியும் என்பதை உணர்ந்து கொண்டவர்கள் பலராவர்.

அதேபோல் "வாஸ்து" சம்பந்தமாக நான் எழுதிய நூல்கள், நேரிடையாக சென்று ஆலோசனை கூறிய பின்பு பெற்ற வெற்றிகளில் மகிழ்ச்சி அடைந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். என்னுடைய "சங்க இலக்கியத்தில் மனை இலக்கணம்" என்கிற ஆய்வு நூலுக்கு செம்மொழி வாரியத்தின் பரிசும் பாராட்டும் மிகச்சிறந்த நூல் என்ற தேர்வும் கிடைத்தது. தமிழகத்தில் வாஸ்து பயிற்சியை பாலிடெக்னிக் கல்லூரியில் சிவில் மாணாக்கர்களுக்கு பாடமாக வைத்து, கனடா இந்தியா கூட்டுப் பயிலகத்தின் மூலமாக அரசு சான்றிதழ் பெற்றுக் கொடுத்துள்ளேன். அடுத்து "ஆல்பா ஐந்திரம்" நூலின் மூலமாக பலருக்கு மனநலத்தையும், அக்குபங்சர் "உணவே மருந்து உடலே மருத்துவர்" நூலின் மூலமாக பலருக்கு உடல் நலத்தையும் செம்மைபடுத்தி உள்ளேன். நிற்க.
இனி நீங்கள் உள்ளே செல்லுங்கள்... வெல்லுங்கள்!...